• Mar 26 2026

'படையப்பா' ரிட்டர்ன்ஸ்.. அமர்க்களமாக கொண்டாட தயாராகும் ரஜினி ரசிகர்கள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வயதானாலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். 

 இந்த நிலையில், ரஜினிகாந்தின்  ஐம்பதாவது ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  அதன்படி ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு முக்கிய திருப்பமாக அமைந்த படம் தான் படையப்பா. இந்த படம்  கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில்  வெளியானதோடு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.


அதிலும்  நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டி இருப்பார். அவருடைய நடிப்பு  பலராலும் பேசப்பட்டது. ரஜினியின்  பஞ்ச் வசனங்கள்,  ஏ. ஆர் ரகுமானின் இசை என்பன அனைத்தும் மாஸாக இருந்தது. 

ரஜினிகாந்த் தற்போது  ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. 

 அதன் பின்பு  ரஜினிகாந்தின் படத்தை பார்க்கிங் பட இயக்குநர்  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாகவும், அந்த படத்தை கமல் தயாரிக்க உள்ளதாகவும், சாய் அபயங்கர் தான் இசை அமைப்பாளர் என்ற தகவலும் வெளியானது. 

Advertisement

Advertisement