• Oct 04 2024

சிறகடிக்க ஆசை சீரியல் படைத்த சாதனை..? திடீர் கொண்டாட்டத்தில் ஆஜரான நடிகர்கள்! வீடியோ உள்ளே..

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல்  நாளாந்தம் புதுப் புது கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் முதல் இளம்வட்ட ரசிகர்கள் வரை இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக காணப்படுகின்றார்கள்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு டிஆர்பி ரேட்டிங்கில்  முன்னிலை வகித்து வந்தது. இந்த சீரியல் ஏற்ற தாழ்வுகளை கொண்டிருந்தாலும் நாளாந்தம் விறுவிறுப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் முக்கிய கேரக்டராக முத்துவும் மீனாவும் காணப்பட்டாலும் இவர்களுக்கு அடுத்த நிலையில் ரோகிணியும் மனோஜும் காணப்படுகின்றார்கள். இவர்கள் செய்யும் தில்லுமுல்லு வேலையும் ஏமாற்று வேலையும் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்கும். அத்துடன் ரோகினி செய்த திருட்டுத்தனங்கள், விஜயா குடும்பத்தை அவர் ஏமாற்றி வருவது என அனைத்தும் எப்போது வீட்டார்களுக்கு தெரிய வரும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.


ஆனாலும் இந்த சீரியலில் அடிக்கடி முத்துவும் மீனாவும் அடி வாங்குவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. டைரக்டர் ரோகினியை காப்பாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பிக்கப்பட்டு 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement