• Jan 19 2025

தளபதி 69ல் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்.. யாரு தெரியுமா? தளபதி மாஸ்டர் பலே பிளான்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக 400 கோடிகளை கடந்து சாதனை படைத்திருந்தது.

கோட் படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அத்துடன் இந்த படத்தில் AI தொழில்நுட்பத்தின் ஊடாக பல காட்சிகளை உருவாக்கி இருந்தனர். மேலும் சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்தியும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக காட்டியிருந்தார்கள். 

இவ்வாறு கோட் படத்தில் டெக்னாலஜியை வைத்து மட்டும் இல்லாமல் கேமியா ரோலில் சிவகார்த்திகேயன், திரிஷா என பல சஸ்பென்ஸ் வைத்து வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியிருந்தார். எனினும் ஒரு சில இடங்களில் வெங்கட் பிரபு இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம் என்ற வகையில் ரசிகர்கள் குறை கூற ஆரம்பித்தார்கள். எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கோட் திரைப்படம் பற்றி விமர்சனங்கள் இருந்தன.

இதைத்தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிக்கும் 69 வது படத்தை எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, சிம்ரன் ஆகியோர் இணைய உள்ளதாகவும் பேசப்பட்டது. இந்த படம் தான் விஜய்க்கு கடைசி படம் என்று கூறப்படுகின்றது.


இந்த நிலையில், மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன மஞ்சு வாரியார் தனக்கு எச்.வினோத் வாய்பொன்றை கொடுத்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் இளைய தளபதியின் கடைசி படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கின்றாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

ஏற்கனவே தமிழில் அசுரன், துணிவு, வேட்டையன் போன்ற படங்களில் நடித்த மஞ்சு வாரியர் தற்போது தளபதி 69 படத்திலும் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் விஜய் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement