• Jan 19 2025

மகிழ் திருமேனிக்கு லைக்கா கொடுத்த வார்னிங்.. வசமா சிக்கிய அஜித்குமார்! அந்தணன் பேட்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு  தயாராக உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ்  என பலர் நடிக்கின்றார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளரான அந்தணன் விடாமுயற்சி படம் பற்றியும் மகிழ் திருமேனி பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பொதுவாகவே இயக்குனர் மகிழ் திருமேனி ரொம்ப ஸ்லோவாகத்தான் எதையும் செய்வார். இந்த விஷயம் தெரியாமல் லைக்காவும் அஜித்தும் மாட்டிக் கொண்டுள்ளார்கள். இதற்குத்தான் சினிமா பற்றி விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி அஜித்திற்கு தெரிந்திருந்தால் நிச்சயம் அவர் மகிழ் திருமேனி வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார். ஆனால் தெரியாமல் போய் வசமா மாட்டிக் கொண்டார்.


சினிமாவில் தற்போது நிறைய போட்டிகள் உள்ளன. இதனால் குறுகிய காலத்தில் அடுத்தடுத்த படத்தை கொடுக்க வேண்டும். அதை விட்டு ஒரு படத்திற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் பின்னால் உள்ளவனும் முந்திக்கொண்டு ஓடிவிடுவான். இதை புரிந்து கொண்டு அஜீத் இயக்குநரை மாற்றி இருக்க வேண்டும்.

விடாமுயற்சி படத்தில் பல சிக்கல் உள்ளது குறித்த தேதிக்குள் படம் வெளியாகவில்லை என்றால் பல பிரச்சனை இருக்கு என்று மகிழ்  திருமேனியிடம் லைக்கா சொன்ன பிறகும் இன்னும் செதுக்கி கொண்டே இருக்கின்றார். ஆனால் விடாமுயற்சி நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement