• Jan 19 2025

செருப்பால அடிச்சு சொன்னாலும் திருந்தாத பாக்கியா... கதிருக்கு லவ்வு பத்திக்கிச்சு..! விஜய் டிவி சீரியல்களின் அலப்பறைகள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான  பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஆகிய சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாக வருகின்றது.

இந்த நிலையில்,  இன்றைய தினம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியானதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்

அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா தற்போது கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பாக்யாவுக்கு சொன்ன நிலையில், பாக்யா கடந்த காலத்தில் கோபியுடன் இருந்த நினைவுகளை மீட்டு பார்க்கிறார். ஆனாலும் ராதிகா இதால உங்களுக்கு எதுவும் சங்கடமா என்று கேட்க, அப்படி ஒன்றும் இல்லை நீங்கள் உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் என்று கூறி விடைபெறுகிறார்.


மறுபக்கம் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில், ராஜி வீட்டுக்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருக்க எதிரே வந்த ராஜின் அண்ணா கோலத்தின் மேலே பைக்கை விட்டு அதை கலைக்கிறார். இந்த பார்த்து கோவப்பட்ட கதிர், ராஜியின் அண்ணாவுக்கு தண்ணியை வீசி அடித்து அவருடன் சண்டை போட, இடையில் புகுந்த அப்பத்தா சண்டையை தடுக்கிறார்.


ராஜியும் மாமாட கல்யாணம் முடிய மட்டும் பேசாம இரு என  கதிரின் கையைப் பிடித்துக் கொண்டு கோலத்துக்கு மேல தானே வண்டியை ஏத்தினால் ஆளுக்கு மேலே இல்லையே விடு என சொல்ல, நீ தான் விடணும் என சொல்லுகிறார்.

மேலும், கதிர் கோலம் போட்டுக் கொண்டு இருக்க, அங்கு வந்த மீனா பாவம் பாசமா மாறி பாசம் காதலா மாறிடுச்சா என கலாய்க்கிறார். இது தான் வெளியான ப்ரோமோக்கள்.

இதேவேளை பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதை கேட்டும் பாக்கியா பேசாமல் அவருக்கு வாழ்த்து சொல்லுவது ரசிகர்களை கடுப்பாகி உள்ளது. இதனால் பாக்கியாவை கண்டபடி திட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

Advertisement

Advertisement