• May 02 2026

மீனாவ திட்டும் போது செம கோவம் வரும்.. உங்க கண்ணு முழிய...!! சல்மா அருணை பாடாய் படுத்திய பேன்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது மேலும் பிரபலம் ஆனதை தொடர்ந்து, அதில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்த சல்மா அருணை பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்து இருந்தது.

இதன் போது பேசிய சல்மா அருண் நிறைய விஷயங்களை தெரிவித்து இருந்தார். மேலும் சன் டிவி சீரியலில் பூவா தலையா சீரியலிலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் தனது ரசிகர்களுடன் பேசுகையில், அவர்கள் ரோகிணி மீது பாச மழையை பொழிந்து உள்ளார்கள். அதில் பேசிய ரசிகர்கள் ஆரம்பத்தில் முத்துவுக்காக தான் இந்த சீரியல் பார்க்க ஆரம்பித்தோம், ஆனால் இப்போ உங்களுக்காக தான் இந்த சீரியலை பார்க்கிறோம் என தெரிவித்து உள்ளார்கள்.


மேலும், நீங்க நிறைய பொய் சொல்லுறது பிடிக்கும். பொய் சொல்லும் பொது உங்க கண்ணு முழி பிடிக்கும் . ஆனாலும் சீரியலில் பார்க்கும் போது ரோகிணியை திட்டியும் இருக்கேன். மீனாவின் பூக்கடையை மாமியாருடன் சேர்ந்து சதி வேலை செய்ததால் கோவம் வந்து இருக்கு என ரசிகை ஒருவர் தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி, நீங்க வேற மொழிகளில் நடிக்கிறீர்களா?  நடிப்பிங்களா என கேள்வி மேல் கேள்வியாக கேட்டு உள்ளார்கள். தற்போது சல்மா அருண் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement