• May 14 2025

நடிகருக்கு வழங்கப்பட்ட உணவில் நெளிந்த புழுக்கள்! அதிர்ச்சி சம்பவம்! அந்த நடிகர் யாரு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

அட்டக்கத்தி, குட்டி புலி ஆகிய படங்களில் சின்ன ரோலில் நடித்தவர் தான் அபி சரவணன். இவர் தனது பெயரை விஜய் விஷ்வா என அண்மையில் மாற்றியுள்ளார். 

தமிழ் சினிமாவில் விஜயகுமாரின் மகனான அருண்குமார் சில படங்களுக்குப் பிறகு தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார். அதேபோல நடிகர் தனுஷ் வெங்கட் பிரபு என சினிமாவுக்காக தமது பெயரை மாற்றிக் கொண்டார்கள். சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் தனது பெயரை மாற்றியுள்ளார்.


இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் விஸ்வா ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்ற நிலையில், அங்கு கொடுக்கப்பட்ட சோஸில் புழுக்கள் நெளிந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது குன்னூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட தக்காளி சோஸில் இந்த புழுக்கள் காணப்பட்டுள்ளது. விஜய் விஷ்வா தனது குடும்பத்தினர் நண்பர்களுடன் சாப்பிட சென்ற நிலையில் அவருக்கு இவ்வாறு நிகழ்ந்துள்ளமை அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement