• Jan 18 2025

தளபதி 69- படத்தை அவசரமாக முடிக்க விஜய் உத்தரவு! இது தான் காரணம்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியுடன் இணைந்து தி கோட் கொடுத்து இருந்தார். இது விஜய் ரசிகர்களை தாண்டி அஜித் ரஜனி என அனைத்து ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இதனிடையே அவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மாபெரும் மாநாடும் நடத்தினார்.


அதற்கு முன்னரே தனது 69 திரைப்படத்துடன் சினிமா துறையை விட்டு மக்கள் சேவைக்காக அரசியலில் இறங்க போவதாக அறிவித்திருந்தார். இது தளபதி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவரின் TVK கட்சியில் சேர்ந்து பணியாற்ற முன்வந்துள்ளனர். அவ்வாறு நடிகர் விஜய் தனது 69வது திரைப்படத்தினை இயக்குனர் வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.


இது இயக்குனர் வினோத்துக்கு 13 வது திரைப்படம். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு பிரியாமணி ஆகியோர்  நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.


இதனால் இயக்குனருக்கு நடிகை விஜய் நிபந்தனை ஒன்றை வைத்துள்ளார். விரைவில் தமிழகம் முழுக்க சென்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார் விஜய் அதனால் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் குதிக்கப் போகிறார் அதன் காரணமாக தனது 69வது படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்காம நடத்தி முடிக்குமாறு இயக்குனர் வினோத்திற்கு உத்தரவிட்டுள்ளார் நடிகர் விஜய். 


Advertisement

Advertisement