சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வாங்கிய புதிய பேலசுக்கு சென்ற விஜயா, அங்கும் மீனாவை வேலை வாங்குகின்றார். மேலும் ரோகினியை உயர்வாக பேசி மீனாவை தரக்குறைவாக பேசுகின்றார்.
இதை தொடர்ந்து வீட்டிற்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஒருவரை அழைத்து வருகின்றார் மனோஜ். அவர் வந்ததும் விஜயாவின் முகம் மகாலட்சுமி போல் இருப்பதாகவும் இதன் காரணத்தினாலே மனோஜுக்கும் அந்த அதிர்ஷ்டம் இருப்பதாகவும் சொல்கின்றார்.
இதை தொடர்ந்து அவர் குறித்த பேலசுக்கு ரோஜா இல்லம் என பெயர் வைக்க, ஓடிவந்த முத்து அப்படி என்றால் மீனா பூ வைக்கின்ற காரணத்தினால் மீனாவின் பெயர்தான் பேமஸ் ஆகும் என்று சொல்ல, மனோஜ் உடனே இந்த பெயர் வேண்டாம் வேற பேரை வையுங்கள் என்று சொல்கின்றார்.
இதனால் ரோகிணியின் பெயரிலிருந்து ரோவையும், மனோதின் பெயரில் இருந்தும் மா.., விஜயாவின் பெயரில் இருந்து யா.. என்று மூன்று பேரின் பெயர்களில் இருந்தும் ஒரு ஒரு எழுத்துக்களை எடுத்து ரோமயா என்று இந்த வீட்டிற்கு பெயர் வைக்கின்றார். இதைக் கேட்டு விஜயா சந்தோஷம் அடைகின்றார். மேலும் அவருக்கு 25000 ரூபாய் கொடுத்து அனுப்புகின்றார் மனோஜ்.
இதை தொடர்ந்து இந்த வீட்டில் பேய் இருக்கா இல்லையா என்பதை பார்ப்பதற்காக பெண் ஒருவரை அழைத்து வருகின்றார்கள். அவரை அழைத்து வரும்போது வீட்டுக்குள் இருந்த மனோஜ்க்கு உடம்பெல்லாம் சிலிர்க்கின்றது. மேலும் அவரை வாசலில் பார்த்து பார்வதியும் விஜயாவும் அதிர்ச்சி அடைகின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!