• Jan 18 2025

இணையத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தேயின் பிரக்னன்சி போட்டோ ஷூட் இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

'வா லைஃப் ஹோத்தோ ஹைசி' என்ற ஹிந்தியில் வெளியான படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் தான் ராதிகா ஆப்தே. இவர்  2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அழகுராஜா, வெற்றிச்செல்வன் போன்ற படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரபலமானார்.

2013ஆம் ஆண்டு பெனடிக் டெய்லர் என்பவரை லண்டனில் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரது திருமணம் பலருக்கும் தெரியாமல் இரகசியமாகவே இருந்தது.


இதைத்தொடர்ந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் ராதிகா ஆப்தே.

இதன்போது லேப்டாப் முன்பாக ஜூம் மீட்டிங்கில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தார். ஆனாலும் சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவருடைய தாய்மையை எண்ணி தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், நடிகர் ராதிகா ஆப்தே வலை போன்ற உடையை அணிந்து அதில் ஒட்டுமொத்த உடலையும் காட்டியும் காட்டாமலும் நடத்திய போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement