சன் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மூன்று முடிச்சி. இந்த சீரியல் சமீபத்தில் ஆரம்பித்து தற்போது ரசிகர்களின் பாராட்டினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் பிரபலங்கள் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மூன்று முடிச்சி சீரியல் சன் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு குடும்ப சீரியல் பணக்காரராகவும், குடிகாரராகவும் இருக்கும் சூர்யாகுமார் என்பவர் ஏழையாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருக்கும் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் அம்மா மீது கடும் கோபத்திலும் பல வருடமாக இருக்கிறார் சூர்யா, இப்படி ஒரு கதைக்களத்துடன் செல்வதுதான் இந்த சீரியல்.
இதில் கதாநாயகியாக சுவாதி கொண்டே, கதாநாயகனாக நியாஸ் கான், சூர்யா அம்மாவாக ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த சீரியல் 100 நாட்களை கடந்த நிலையில் மூன்று முடிச்சி சீரியல் பிரபலங்கள் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என சீரியல் குழு அணைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த சீரியல் பிரபலங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Listen News!