• Jan 19 2025

அமைச்சரால் திடீரென நிறுத்தப்பட்ட தமன்னா படப்பிடிப்பு.. ரூ.2 கோடி நஷ்டம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா நடித்த படத்தின் படப்பிடிப்பு அரசு மருத்துவமனையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் அந்த படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை தமன்னா நடித்து வரும் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்த மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முறையாக அனுமதி பெற்று இருந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த படப்பிடிப்பிற்காக மருத்துவமனையில் ஒன்றரை கோடி செலவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்ததாகவும் ஒரு நாள் படப்பிடிப்புக்கு 50 லட்ச ரூபாய் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்து மருத்துவமனையில் நடைபெறும் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவு வந்ததாகவும் இந்த உத்தரவை அடுத்து அரசு மருத்துவமனையின் டீன், படப்பிடிப்பை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் படப்பிடிப்பை ஏன் நிறுத்துகிறீர்கள் என படக்குழுவினர் மருத்துவமனை டீன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அமைச்சர் உத்தரவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்தியே ஆக வேண்டும் என்று கூறியதால், வேறு வழியின்றி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்த போட்ட செட் மற்றும் 50 லட்ச ரூபாய் படப்பிடிப்பு செலவு என மொத்தம் 2 கோடி ரூபாய் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் முறைப்படி அனுமதி வாங்கி பட படிப்பை நடத்துவோம் என்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் பேட்டி அளித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் படப்பிடிப்பு நடத்துவதால் நோயாளிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்று ஏற்கனவே சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement