• Apr 16 2026

அப்டேட்டுன்னா இப்படி இருக்கணும்.. ‘ஏகே 63’ படத்தின் டைட்டில் உட்பட முழு தகவல்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்தின் 63 வது படமானஏகே 63’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்திற்குகுட் பேட் அக்லிஎன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பணி புரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் போஸ்டரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அப்டேட்டை பார்த்து உற்சாகமாகியுள்ள அஜித் ரசிகர்கள் அப்டேட் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பை தொடங்கும் மாதம் முதல் ரிலீஸ் மாதம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதை பார்த்து லைக்கா நிறுவனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் நடித்து வரும்விடாமுயற்சிபடத்தின் அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இன்னும் எந்த விதமான அப்டேட்டும் இல்லாமல் ஏமாற்றத்தில் இருந்த நிலையில்ஏகே 63’ படத்தின் முழுமையான அப்டேட் ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது


Advertisement

Advertisement