என்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி, ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அதன் பின்பு ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.
இதற்கிடையில், தன்னை இரண்டாவது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தில் ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்றும், அவர் தான் தனது குழந்தைக்கு தந்தை என்று ஒப்புக் கொண்டதாகவும் இன்ஸ்டாகிராமில் ஜாய் தெரிவித்தார். ஆனால் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கூறி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

இதன்போது ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரிய வந்தால் அந்தக் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுக்க நான் ஏற்கிறேன்.
என்னுடைய நற்பெயரை பாதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை ஜாய் வெளியிட்டுள்ளார். என்னைப் பற்றிய அவதூறான வீடியோக்களையும் வெளியிட்ட youtube சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ரங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மேலும் இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை எதிர்வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Listen News!