விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதுவரை பிக் பாஸ் வீட்டைச் சுற்றி சண்டை, சச்சரவுகள், வீண் வாக்குவாதங்கள் என்று ரசிகர்களை சலிப்படையச் செய்த போட்டியாளர்களுக்கு மத்தியில், இறுதியாக ஒரே வாரத்தில் இரண்டு பேர் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
மேலும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இரண்டு சீசன்களிலும் முதல் முறையாக குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. அதில் சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க், அதில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் இறுதியாக பிக் பாஸ் கொடுத்த டாஸ்கை நிறைவேற்றிவிட்டு கேம் ஓவர் என்று காலுக்கு மேல் கால் போட்டு அவர் அமர்ந்த விதம் பலரையும் கவர்ந்தது.

இதை தொடர்ந்து நேற்றைய தினம் இடம் பெற்ற கேப்டன்ஷி டாஸ்கில் சபரிக்கும் பார்வதிக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதில் பார்வதியை ஷூ காலால் மிதித்துள்ளார் சபரி. இதனால் பார்வதியின் கண்கள் வீங்கி மிகவும் பரிதாபமாக காணப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸிடம் சென்று தனியாக புலம்பி அழுதுள்ளார் சபரி. தற்போது அவர் அழுது புலம்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது தனியாக சத்தமாக அழுதால் எல்லாம் சரியாகிவிடும் என்று பிக் பாஸிடம் தனியாக பேசுகின்றார் சபரி. பிக் பாஸும் அப்படி என்றால் சத்தமாக கதறி அழுங்க என்று அவருடைய போக்கிலேயே விட்டுவிடுகிறார்.
இதனால் எல்லாரும் என்னை ஃபேக் ஃபேக் என்று சொல்லுகின்றார்கள். ஒரு வாரத்துக்கு ஒரு மாதிரி சொல்லுகின்றார்கள் என்று சொல்லி கதறி அழுதார் சபரி. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Listen News!