• Dec 19 2025

மலையாளம் கலக்குது.. தமிழ் சினிமா ஏன் தடுமாறுது.? சரமாரியாக கேள்வியெழுப்பிய டி. ராஜேந்தர்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் வளர்ந்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கம், இசை, நடிப்பு, பாடல்கள் பாடுவது என அத்தனை வித்தைகளையும் கற்று  வைத்துள்ளார். ஆனாலும் இவருக்கு ஆரம்பத்தில்  வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லையாம். 

பிறகு தனது முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு  ராஜேந்திரை  அதிகமாக தயாரிப்பாளர்கள்  புக் செய்துள்ளனர்.  அதன்படி என் தங்கை கல்யாணி, உயிர் உள்ளவரை உஷா என பல படங்களின் ஊடாக ஹிட் கொடுத்தார்.  இவருடைய படங்களை குடும்பங்கள் கொண்டாடி தீர்த்தன. 


தனது வழியில் தனது மகனையும் சினிமாவில் நுழைத்தார் டி. ராஜேந்தர். சிறுவயதிலிருந்தே சிம்புவை நடிக்க வைத்தார். அவரும் தனது தந்தையைப் போலவே பல துறைகளில் கெத்து காண்பித்து வருகின்றார் . தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக காணப்படுகின்றார். 

தற்போது டி. ராஜேந்திர் டி, ஆர் டாக்கீஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவருடைய சேனலில் தனது வழக்கமான  எதுகை மோனைகளோடு  சினிமாவில் சந்தித்த அனுபவங்கள்,  ஹீரோக்கள், அரசியல் ,  திரையுலக  தகவல்கள் பற்றியும் தெரிவித்து வருகின்றார். 


இந்த நிலையில்  மலையாளத்தில் ஓடுது லோகா.. தமிழ் திரையுலகம் ஆகுது வீக்கா என  தமிழ் சினிமா பற்றி  தனது  பாணியில் மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில்  கன்னட படம் காந்தாரா ஓடிட்டு இருக்குது தாறுமாறா... ஆனால் தமிழ் படம் ஏன் ஆவது நேர்மாறா... மலையாள படம் கலக்குது லோகா...  ஆனால் தமிழ் திரையுலகம் ஆகுது வீக்கா.. பட உலகம் ஆகுது ஷாக்கா..

கேட்டா பட்ஜெட் பத்தல என்று சொல்லக்கூடாது சாக்கா... படம் எடுக்கிறது என்ன ஜோக்கா... கதாநாயகன் கால் சீட்டுக்காக புடிச்சிட்டு இருக்கக் கூடாது காக்கா.. ரெய்லர்னு சொன்னா துணில போட தெரியணும் டாக்கா... தயாரிப்பாளர்ன்னு சொன்னா படம் எடுக்க தெரியணும் நேக்கா..   என்றார்

Advertisement

Advertisement