தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகையரான கீர்த்தி சுரேஷ், தனது காதல் வாழ்க்கையைப் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். பல வருடங்களாக தனது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் கீர்த்தியின் திருமணத்தை பற்றி கதைத்து வந்தாலும், தற்போது அவர் தன்னுடைய காதல் கதையை பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் தனது காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறிய கீர்த்தி, “நான் என் கணவரான ஆண்டனியை பல வருடங்களாக காதலித்தேன். நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோரை பற்றிய பயம் எப்போதும் இருந்தது. ஆனால் என் அப்பா என் மீது வைத்த நம்பிக்கையால், என்னைத் தேர்ந்தெடுத்தவரை ஏற்றுக்கொண்டார்,” என்றார்.
கீர்த்தியும் ஆண்டனியும் 15 ஆண்டுகளாக காதலிக்கிறார்கள் என்பது சினிமா வட்டாரத்தில் பெரிதாகக் வெளிவரவில்லை. கல்லூரி நாட்களில் தொடங்கிய இந்த காதல், அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு சோதனைகளைக் கடந்து வளர்ந்தது.

அத்துடன், தன்னுடைய திருமணத்தை ஒரு பொது விழாவாக கொண்டாட முடியாதது குறித்து, கீர்த்தி வருத்தம் தெரிவித்தார். “நாங்கள் அனைவரையும் அழைக்க இயலவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் கீர்த்தி கூறியுள்ளார்.
Listen News!