தமிழ் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அவர்கள் திருமண மோசடி புகாரைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இருவருக்கும் சம்மன் அனுப்பி, அவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின்படி, மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். இருவரும் தனிமையாகவும் வாழ்ந்திருந்தனர். அந்த உறவின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டது என புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிறகு ரங்கராஜ், தனது முதல் மனைவியிடம் சென்றுவிட்டார்.இந்த சூழ்நிலையில், ஜாய் கிரிஸில்டா முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்பட்டாலும், அங்கு எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் அவர், தமிழக மகளிர் ஆணையத்தை நாடினார் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தற்பொழுது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், இருவருக்கும் சம்மன் அனுப்பி நாளை [அக்டோபர் 15ஆம் தேதி] சென்னை மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Listen News!