தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கி, தற்போது முன்னணி நடிகராக திகழும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கைப் பார்வை, சமூகம், விமர்சனங்கள் குறித்து தெளிவான மற்றும் நேர்மையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவரின் பேச்சு, பலரிடம் சிந்தனையை உண்டாக்கும் வகையில் இருந்ததோடு, தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ விரும்புகின்றார் என்ற மனநிலையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, "நான் யாரையும் மதிக்கிறது கிடையாது" என்ற அவரது வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளன.
விஜய் ஆண்டனி அதன் போது தெரிவித்ததாவது, “நான் யாரையும் மதிக்கிறது கிடையாது. நாம மதிக்கிறவங்க ஏதாவது சொல்லிட்டா தான் நாம அவமானப்படுவோம். நமக்கு பசிச்சா இட்லி சாப்பிடுவோம். ஆனா இட்லி சாப்பிட்டு இருக்க கூடாதுனு ஆயிரம் கருத்து வரும். இது நம்ம வாழ்க்கை, நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்தா அவமானப்பட மாட்டோம்.”
இந்த ஒரு நேரடி வாக்கியம், அவரது தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கையை யாருடைய எதிர்பார்ப்புக்கும் உட்படாமல் வாழும் உந்துதல் என்பவற்றை வெளிப்படுத்துகிறது.
தொடக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, 'சலீம்', 'பிச்சைக்காரன்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவர் தனது நடிப்பிலும், வாழ்க்கை வழிகாட்டுதலிலும் ஒரு நேர்மையான வழிமுறையை பின்பற்றுவர் என்பது பல நேர்காணல்களின் மூலம் தெரியவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!