முன்னனி நடிகர் சூர்யா தற்போது இரண்டு படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார். ஒன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ" மற்றையது rj பாலாஜி இயக்கி வரும் "சூர்யா 45" இரண்டு படங்களினதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இன்றைய தினம் தனது பிறந்தநாளினை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றினை வழங்கியுள்ளார்.
படக்குழு அறிவித்தது போன்று மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு "ரெட்ரோ " படம் வெளியாகவுள்ளது. இப் படத்தின் முதலாவது பாடல் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாகி பட்டி தொட்டி முழுவதும் வைரலாகியது.
இந்த நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடல் "கனிமா " மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்ட்டர் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட்டரில் சூர்யா 80 களில் இருக்கும் ஆட்களை போன்று உடையில் இருக்கின்றார். இந்த பதிவு தற்போது சூர்யா ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Listen News!