தனுஷ் இயக்கத்தில் அவரது ஒண்டெர் பார் நிறுவனம் தயாரித்து புதுமுக இளம் நடிகர்களான பவிஷ் நாராயண், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ஆர்.சரத்குமார், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் நடிப்பில் வெளியாகிய " நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் " திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை
இப் படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 9.75—10 கோடி வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்பார்த்த அளவு தியேட்டரில் படம் ஒடாமையினால் எந்த ஒரு டிஜிட்டல் தளமும் படத்தினை விலைக்கு வேண்டவில்லை ஆகவே ott வெளியீட்டு திகதியில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இப் படம் அமேசான் பிறைம் தளத்தில் மார்ச் 21 ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட்டருடன் பதிவிட்டுள்ளார். தியேட்டரில் கிடைக்காத வரவேற்பு டிஜிட்டல் தளத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.
Listen News!