• Jan 19 2025

இலங்கையில் குவிந்த தென்னிந்திய நடிகைகள்! பிக் பாஸ் பிரபல நடிகை வெளியிட்ட போட்டோஸ் இதோ...

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகைகள் அண்மையில் இடம்பெற்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்கள். தற்போது இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இலங்கையின் மலையகத்தை சேர்ந்த அமைச்சரான ஜீவன் தொண்டமானின் அழைப்பை ஏற்று, தென்னிந்திய நடிகைகள் சிலரும் தேசிய பொங்கல் விழாவில் பங்கெடுத்து உள்ளனர்.


இவ்வாறு குறித்த நிகழ்வில் பிக் பாஸ் பிரபலங்களான சம்யுக்தா, மீனாட்சி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இலங்கை ஹட்டனில் பகுதியில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட, பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதேவேளை, கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதோடு, அதில் தென்னிந்திய நடிகைகளும் பங்கேற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement