• Jan 19 2025

ராணியாக வாழ ஆசைப்படும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை! அப்போ இனி சீரியலுக்கு முழுக்கா? பரபரப்பு போஸ்ட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக  ஒளிபரப்பாகும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல். டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறித்த சீரியலில், பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.


இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ், விபு ராமன், சத்யபிரியா, பாம்பே ஞானம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஹரிப்ரியா தற்போது தனது துபாய் டூர் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அதில், அரேபியா இளவரசி போல் ஆடையணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த புகைக்கப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement