• Jan 09 2026

சூரியின் ’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி இதுதான்: தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் ரிலீஸ் க்கு தயாராக இருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சூரி நடித்த 'கருடன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சூரியின்  ’விடுதலை 2’ உள்பட ஒரு சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படம் சர்வதேச திரையரங்க விருதுகள் விருது விழாக்களில் வெளியிடப்பட்டது என்பதும், குறிப்பாக ருமேனியாவின் டிரான்ஸில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது என்பதும், அதேபோல் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த  நிலையில் தற்போது திரையரங்கில் ’கொட்டுக்காளி’ ரிலீஸ் ஆகவுள்ளதை  அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூரி, அன்னாபென் நடிப்பில் உருவாகி உள்ள ’கொட்டுக்காளி’ திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் நிலையில் இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement