சிவகார்த்திகேயன் நடித்த
‘அமரன்’என்ற திரைப்படம் 120 கோடி
ரூபாய்
பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த
பட்ஜெட்டில் பாதி
அதாவது
60 கோடி
ஓடிடி
ரிலீஸ்
உரிமையில் மட்டும் கிடைத்து விட்டதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும்
திரைப்படம் ’அமரன்’.
இந்த
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்
நடைபெற்று வரும்
நிலையில் சமீபத்தில் இந்த
படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில்
இணையத்தில் வைரல்
ஆனது
என்பதையும் பார்த்தோம்.
இந்த
நிலையில் இந்த
படத்தின் பிசினஸ் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் முதல்
கட்டமாக ஓடிடி
ரிலீஸ்
உரிமையை நெட்பிளிக்ஸ் தளம்
60 கோடி
ரூபாய்
கொடுத்து வாங்கி
உள்ளதாக தெரிகிறது. இதுதான் சிவகார்த்திகேயன் படத்திலேயே அதிக
அளவுக்கு ஓடிடி
பிசினஸ் நடந்த
படம்
என்பது
ஆச்சரியமான தகவலாகும்.
இந்த
படத்தின் மொத்த
பட்ஜெட் 120 கோடி
ரூபாய்
என்று
கூறப்பட்ட நிலையில் அதில்
பாதி
ஓடிடி
ரிலீஸ்
உரிமையிலேயே வந்துவிட்ட நிலையில் இன்னும் சாட்டிலைட் உரிமை,
தமிழக
ரிலீஸ்
உரிமை,
இந்திய
ரிலீஸ்
உரிமை,
வெளிநாட்டு ரிலீஸ்
உரிமை,
பாடல்கள் உரிமை
என
சுமார்
200 முதல்
300 கோடி
ரூபாய்
வரை
பிஸ்னஸ் ஆகும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு இந்த
படம்
ஒரு
மிகப்பெரிய வெற்றி
படமாக
அமையும் என்றும் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!