• Jan 19 2025

பலமுறை கேட்டும் வாய்ப்பு கொடுக்காத சிவகார்த்திகேயன்! விழா மேடையில் வடிவுக்கரசி பகிர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

80, 90 ஆம் ஆண்டுகளில் நடிகையாகவும் வில்லியாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் நடிகை வடிவுக்கரசி. அவர் படங்களில் நடித்த சில கேரக்டர்களை இன்றும் மறக்கவே முடியாது. தற்போது ஒரு சில படங்களில் அம்மாவாகவும் பாட்டியாகவும் நடித்து வருகின்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அத்துடன் 90ஸ் கிட்ஸ்களை மிரட்டிய பேய் படங்களிலும் இவரது நடிப்பு பயங்கரமாகவே காணப்பட்டது.


தற்போது படங்களையும் தாண்டி சின்னத்திரையிலும் நடித்து வரும் வடிவுக்கரசி, இன்றைய தினம் வெளியான நடிகர் சூரியின் கருடன் படத்தில் நடித்துள்ளார்.

கருடன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினரையும் தாண்டி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.


இந்த நிலையில், குறித்த விழா மேடையில் பேசிய வடிவுக்கரசி, பலருடன் நடித்துவிட்டேன். ஆனால் இன்னும் சிவகார்த்திகேயனுடன் மட்டும் நடித்ததில்லை. பலமுறை அவரிடம் இது குறித்து பேசினேன். எப்போதுமே அடுத்த படத்தில் நடித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாரே தவிர இன்னும் வாய்ப்பு தரவில்லை என்று சொன்னார்.

இதை கேட்டதும் சிவகார்த்திகேயன் உடனே மேடைக்கு ஓடிவந்து வடிவுக்கரசியின் கைகளை பிடித்து அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கள் நடிக்க போறீங்க என்று சொல்லிவிட்டு சென்றார்.

Advertisement

Advertisement