தமிழ் சினிமாவின் 90களில் ரசிகர்களின் மனதை மகிழ்வித்த நடிகை சிம்ரன், சமீபத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்துள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் பகிர்ந்த கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
சிம்ரன் கூறும் போது, "இப்போ எல்லாரும் மொபைலுக்குள்ளே உலகத்தை தேடிட்டு இருக்கோம். வெளியே பயணிக்க நேரமே இல்ல. டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி படம் எடுத்தாலும், மொபைல் தான் முக்கியம் " என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும்,"குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முக்கியத்துவம் கொடுக்கணும். குழந்தைகள் நம்மோட நேரம் எதிர்பாக்குறாங்க. ஆனா நம்ம சைடு மொபைலே முக்கியமா ஆயிடுச்சு. யாராவது ஒரு படம் எடுத்தா போதும், எல்லாரும் எதிலிருந்து பார்த்தாலும் சந்தோஷமா இருக்குறதில்ல" என்றார். அவரின் இந்த உரை, நம் சமூகத்தில் இன்று காணப்படும் மொபைல் பைத்தியத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் நினைவாக இருந்தது. இன்று, அது 'போஸ்ட் பண்ணுற படம்' என்ற நிலைக்கு வந்துவிட்டது.
சிம்ரனின் உண்மைசொல்லும் வார்த்தைகள், நம்மை மொபைலை வைக்க வைத்து, நேரத்தை குடும்பத்துக்கு அர்ப்பணிக்கச் செய்யும் அழைப்பாக மாறியுள்ளது.
Listen News!