தமிழ் சினிமாவில் திரையரங்களும் ரசிகர்கள் மனதில் வெற்றி திரைப்படமாக பதிவானது "டூரிஸ்ட் பேமிலி" இந்த திரைப்படத்திற்கான வெற்றி விழா நேற்றைய தினம் நடை பெற்றது. அவ்விழாவில் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த விழா நிறைவில் நடிகை சிம்ரன் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"டூரிஸ்ட் பேமிலி" வசூல் ரீதியில் வெற்றி நடை போட்டு வருகின்றது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் சசி குமார்,கமலேஷ் ,எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் எனப்பலர் நடித்திருந்தனர். மே முதல் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சாதனை பெற்றது.
படத்தின் வெற்றி விழா நிகழ்வில் கலந்து கொண்ட சிம்ரன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விழா நிறைவுற்று செல்லும் போது பொறுமையாக நின்று புகைபடத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!