• Oct 30 2025

முதன் முறையாக ஜாய் கிரிஸில்டாவின் முகத்திரையை கிழித்த ஸ்ருதி..! வைரல் போஸ்ட்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் பிரபல சமையல் கலைஞராக  திகழும் மாதம்பட்டி ரங்கராஜ்  தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தார்.  தற்போது ஜாய்  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்,   மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக  ஜாய் கொடுத்த புகாரில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் கலைஞராக மட்டுமில்லாமல்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளியில் நடுவராகவும்  வலம் வருகின்றார்.  இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ஜாய் கிரிஸில்டாவை  திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் அடுத்த நாளே அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

எனினும்  அதற்குப் பிறகு  ரங்கராஜ்  தன்னை ஏமாற்றியதாக ஜாய் வழக்கு தொடர்ந்தார்.   இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்  தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் என்ட்ரி கொடுத்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.


இந்த நிலையில்  மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி இதுவரை மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது  தனது நிலைப்பாட்டை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில்,  என் மீது பலரும் பரிவு காட்டுவதை பார்த்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று நினைக்கின்றேன். நானும் எனது குழந்தைகளும் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்கின்றோம் என்று தெரியாமல் பலரும் விமர்சிக்கின்றார்கள். 

ஆனால்  என்னுடைய அறிவு முதிர்ச்சி, அனைத்திற்கும் மரியாதை உடன் பதில் அளிக்க கற்றுக் கொடுத்துள்ளது.  எல்லா குடும்பத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.  அவற்றை ஒன்றாக இணைத்து எதிர்கொண்டு அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

மேலும் வெளி நபர் வந்து சட்டபூர்வமான மனைவியை விரட்ட பல முயற்சிகளைச் செய்யும்போது, அதை அப்படியே விட்டு விடாதீர்கள். வலிமை, கண்ணியம், மன உறுதியுடன் இருக்கும் சட்ட பூர்வமான மனைவிகளை போல நானும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார்.. தற்போது இவருடைய பதிவு பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

Advertisement

Advertisement