• Oct 30 2025

ஏய்னா என்ன.? சண்டைக்கோழியிடம் வம்பிழுத்த கனி.. Monday _வை மங்களகரமா ஆரம்பிச்ச ப்ரோமோ

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது.  இம்முறை  கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது மூன்று வாரங்களை கடந்துள்ளது. 

தற்போது பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.  அதில் பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும், லக்சரி ஹவுஸில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கனிக்கும் பார்வதிக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதன்படி  பார்வதி  ஆடைகளைக் கொண்டு சென்று  கனி நிற்கத்தக்க கையில் கொடுக்காமல் கீழே வைத்து விட்டு வருகின்றார்.   


இதனால் கோபம் அடைந்த கனி,  வாசலில் ஒருத்தர் நின்றுகொண்டு தேங்க்யூ என்று கையில் வாங்க நிற்கும் போது,  கீழ வச்சிட்டு போறது ரொம்ப ரொம்ப தப்பு என்று சொல்ல,   எனக்கு டோர் டெலிவரி என்று தான் சொன்னார்கள் என்று பார்வதி சொல்லுகின்றார். 

இதனால் சாரி சொல்லுமாறு கனி சொல்லிக் கொண்டிருக்க ,  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பார்வதி ஏய்...என்ன சும்மா எதுக்கு எடுத்தாலும்.. என்று கத்த..  கனியும் ஏய்னா.. எனக்கும் தான் ஏய்னு.. சத்தம் போடுகின்றார்.

மேலும், தப்பு செய்து விட்டு அவர்களே தைரியமாக பேசும் போது எனக்கு சாரி கேட்டாக வேண்டும் என்று கனி ஒரு பக்கம்  அமர, இன்னொரு பக்கம்  என்ன எல்லாரும் டார்கெட் பண்றாங்க என்னால் சாரி கேட்க முடியாது என்று  பார்வதியும்  தரையில் அமருகின்றார்.  இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement