• Jan 19 2025

கோமாவில் இருக்கும் நடிகைக்காக நிதி திரட்டும் சீரியல் நடிகை.. இப்படி ஒரு மனசு யாருக்கு வரும்?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விபத்தில் சிக்கிய படுகாயம் அடைந்து கடந்த சில வாரங்களாக கோமாவில் இருக்கும் நடிகையின் சிகிச்சைக்காக சீரியல் நடிகை ஒருவர் நிதி திரட்டி வருவதாகவும் அவருடைய தீவிர முயற்சி காரணமாக ஒரு பெரிய தொகை கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

தமிழில் ’பொங்கி எழு மனோகரா’ ’விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ ’சைத்தான்’ ’கன்னி ராசி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி ராய். இவர் சமீபத்தில் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானார். இவருடைய சகோதரருக்கு சின்ன காயம் தான் என்றாலும் அருந்ததிநாயருக்கு தலையில் காயம் பட்டதால் அவர் மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 



இந்த நிலையில் அருந்ததி நாயரை குணப்படுத்த லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறப்படும் நிலையில் அவருடைய வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த அளவுக்கு வசதி இல்லை என்று தெரிகிறது. இதனால் அருந்ததி நாயருடன் சில படங்களில் நடித்த ’பூவா தலையா’ ’சண்டகோழி’ ஆகிய சீரியல்களில் நடித்து வரும் ரம்யா தனது தோழியை காப்பாற்றுவதற்காக தனக்கு தெரிந்த சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களிடம் நிதி திரட்டும் பணியில் இருக்கின்றாராம். 

அவருடைய தீவிர முயற்சி காரணமாக ஒரு பெரிய தொகை நிதி கிடைத்து விட்டதாகவும் டிவி நட்சத்திரங்களான சித்தார்த், வினோத் உள்ளிட்ட சிலர் கணிசமாக தொகை கொடுத்ததாகவும் ஆனால் சினிமா பக்கம் இருந்து யாரும் உதவி செய்யவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் இந்த பணத்தை வைத்து தன்னுடைய தோழியை காப்பாற்றி விடுவேன் என்றும் அவர் கூறி வருகிறாராம் ரம்யா.

அருந்ததி நாயர் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் இணைந்து சில படங்கள் நடித்துள்ளதாகவும் அப்போது இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நட்பின் அடிப்படையில் தான் ரம்யா தனது தோழி அருந்ததி நாயரை காப்பாற்ற சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் வீடு வீடாக படி ஏறி நிதி திரட்டி உள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement