• Jan 19 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ரெளடி குடும்பத்திடம் சிக்குவாரா சரவணன்? அப்பாவியாக இருக்கும் பாண்டியன்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ’விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் - கோமதி தம்பதிகளின் இளைய மகன் வேலைக்கு சென்று வந்தது குறித்து அனைவரும் விசாரிக்கின்றனர். உணவு டெலிவரி செய்யும் வேலை உனக்கு கஷ்டமாக இல்லையா? தாமதமாக உணவு டெலிவரி செய்தால் திட்ட மாட்டார்களா? என்று அண்ணன்கள் விசாரிக்கும் நிலையில் ’அதெல்லாம் எனக்கு கஷ்டமாக இல்லை, நான் சரியான நேரத்திற்கு கொண்டு போய் கொடுத்து விடுவேன், என்று கூறுகிறார். 

நீங்கள் மளிகை பொருட்களை கடையில் இருந்து எடுத்துக் கொண்டு போய் டெலிவரி செய்கிறீர்களே, அதே போல் தான் நான் சமைத்த உணவை டெலிவரி செய்கிறேன் என்று தனது குடும்பத்தினரிடம் அவர் சமாதானம் செய்கிறார். இந்த நிலையில் தனது மகன் முதல் நாள் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்திருப்பார் என்று கோமதி பால் கொண்டு வரும் நிலையில் அவர் அந்த பாலை குடிக்காமல் தூங்க சென்று விடுகிறார். 

இந்த நிலையில் மூத்த மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பாண்டியன், சுயம்வரத்தில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் பாண்டியன் மருமகள்  அந்த குடும்பத்தை பற்றி நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூற, அந்த குடும்பத்தினரை பார்த்தாலே ஒழுக்கமானவர்கள் அமைதியானவர்கள் போல் தெரிகிறது என்று பாண்டியன் அவரை சமாதானம் செய்கிறார். 

ஆனால் அதே நேரத்தில் அவர்கள் பெண் பார்த்து இருக்கும் குடும்பம் ஒரு பெரிய ரவுடி குடும்பம் என்று தெரிய வருகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம் வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பவர்கள் என்றும் குறிப்பாக பெண்ணின் அப்பாவும் அம்மாவும் நடுரோட்டில் தனது வீட்டின் முன் வண்டியை நிறுத்திய ஒருவரிடம் சண்டை செய்யும் காட்சிகளும் அடுத்தடுத்து தோன்றுகின்றன. 

சரி பெண்ணின் பெற்றோர்கள் தான் இப்படி என்றால் சரவணனுக்கு பார்த்த பெண்ணும் ரவுடி போல் தெருவில் வேற லெவலில் இறங்கி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்பாவியான சரவணனுக்கு ஒரு ரவுடி குடும்பத்தில் இருந்து பெண் எடுப்பார்களா? இந்த திருமணம் நடக்குமா? சரவணன் இந்த ரெளடி குடும்பத்தில் இருந்து தப்பிப்பாரா? என்பதை எல்லாம் இனிவரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.

Advertisement

Advertisement