• Feb 25 2025

" சினிமாவில் no சொன்னது அதிகம்..அக்காவும் அம்மாவும் அடிப்பாங்க.." சித்தார்த் பேச்சு...

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

நடிகராக மாத்திரமின்றி பாடகராகவும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சித்தார்த் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தற்போது அனைவராலும் விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றார். ஆரம்பங்களில் அதிக படவாய்ப்பு இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்த இவருக்கு இப்போது வாய்ப்புகள் சற்று குறைந்துள்ளது. நடிகை அதிதியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.


வாழ்க்கையில் மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் தற்போது சினிமா குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. குறித்த நேர்காணலில் அவர் " நான் சினிமாவிலே அதிகமா சொன்ன வார்த்தை No தான் நான் படம் பண்ண மாட்டேன்னு சொன்னதுக்கு நிறைய காரணம் இருக்கு ஒரு படம் ஏன் பண்றேன் என்பதற்கும் காரணம் இருக்கு அந்த படம் ஓடும் ஓடாது என்றது விட எனக்கு படம் ok எண்டால் பண்ணிடுவேன் நான் அந்த விசயத்தில் சுயநலவாதி ;நான் நிறைய விசயத்திற்கு no சொல்லியிருக்கன் நான் iteam song பண்ணது கிடையாது பொண்ணுங்கள தப்பா காட்டும் காட்சி எதிலுமே நான் நடிச்சது இல்லை ஹீரோ role பண்றது மக்களுக்கு ஒரு வழிகாட்டிய இருக்கணும் அதை விட அப்புடி role பண்ணா எங்க அக்காவும் அம்மாவும் அடிப்பாங்க " என கூறியுள்ளார்.


மற்றும் இவர் நடிப்பில் இந்தியன் 3 படம் விரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

Advertisement

Advertisement