• Feb 25 2025

அமெரிக்காவில் எதிர்பாரா வசூல் வேட்டையில் dragon..!

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

ஓ மை கோட் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ,அனுபமா ,கஜாடு நடிப்பில் வெளியாகிய dragon திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகின்றது. trailor வெளியாகியதும் படம் டான் படம் போன்று இருக்கிறது. இது டான் 2 என பலரும் விமர்சித்து வந்தனர்.


இவர்களின் வாயை அடைக்கும் படியாக இயக்குநர் மிகவும் தரமான படத்தினை இறக்கியுள்ளார். இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியிருந்தாலும் இந்த படத்திற்கு ஒருபடி மேல் வரவேற்பு கிடைத்து வருகின்றது. படம் வெளியாகி மூன்று நாட்களில் உலகளவில் 50 கோடி வசூலித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த வாரத்திற்குள் ஏறத்தாள 75 கோடி வரை வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதைவிட us இலும் இந்த படம் வசூலில் கொடி கட்டி பறந்து வருகின்றது. மூன்று நாட்களில் ஜந்து லட்ஷம் டொலர் வரை வசூலித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன இதற்கிடையில் படக்குழு ஆந்திரா பக்கம் படம் குறித்து நோட்டம் பார்க்க சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மற்றும் மீண்டும் இந்த கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement