• Jan 18 2025

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகும் "சர்தார் 2" படப்பிடிப்பு !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து உலகெங்கும் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் கார்த்திக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது "சர்தார்" திரைப்படம்.

சர்தார்-2 அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி! விரைவில் அடுத்த ரூ.100 கோடி  ரெடி... - Dinasuvadu

சமூக கருத்துடனான அரசியல் பேசிய இவ் ஆக்ஷன் திரைப்படம் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏற்படுத்தியது. இந்நிலையில் கார்த்தியை வைத்து மித்திரன் "சர்தார் 2" படத்தினை இயக்கவிருப்பதாகவும் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க விருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

சர்தார்-2 படப்பிடிப்புக்கு தயாராகும் கார்த்தி! - Cini Rocket

இந்நிலையில் இந்த  மாதத்தின் முதல் வாரம் முதலே "சர்தார் 2" இற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.கார்த்தியின் படங்களிலேயே அதிக முதலீட்டில் ஆரம்பிக்கும் இப் படத்திக்கான படப்பிடிப்புகள் பெரும் செலவில் பல்வேறு தளங்களில் நடைபெறவிருப்பதாக அறியக்கூடியதாய் உள்ளது.


Advertisement

Advertisement