• Jan 18 2025

செல்ல மகளுக்காக தடபுடலாக நடக்கும் கொண்டாட்டங்கள்! கையில் மெஹந்தி போட்ட சரத்குமார்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் வரலட்சுமி சரத்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அவருடைய காதலர் நிக்கோலை சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

எனினும் வரலட்சுமி வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகள் ஒருவரும் இருக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத வரலட்சுமி, தற்போது தனது திருமணத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை ஹாலிவுட்,  பாலிவுட் மற்றும் டோலிவுட் என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.


இந்த நிலையில், இன்று திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி , முதல் நாள் மெஹந்தி விழா நடந்து முடிந்திருக்கிறது. வரலட்சுமியின் திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதில் ராதிகா, சரத்குமார் டான்ஸ் ஆடிய வீடியோக்களும் சரத்குமார் கையில் மெஹந்தி போட்டுக் கொண்ட வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமி திருமணத்திற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, சரத்குமாரின் சந்தோஷத்தையும் பார்த்து மகிழ்ந்து வருகின்றார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement