• Jan 19 2025

ஒரு நாள் முழுக்க ஜெயில்ல இருந்த அனுராக் காஷ்யப்... வெளியான அதிர்ச்சி தகவல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், மகாராஜா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் தான் நடிகர் அனுராக் காஷ்யப். குறித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தன.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர். சி கூட்டணியில் உருவான ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதன் பெயர்களும் பார்க்கும்போது மிரட்டலாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுராக்,  தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து உள்ளார்.


அதன்படி அங்கு ஜெயில் குறித்து கேட்டப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் கூறுகையில், ஆம் நான் ஜெயிலில் இருந்திருக்கிறேன். ஒருவரை அடித்ததுல நான் ஜெயிலுக்கு போனேன். நான் தப்பான ஆள் மேல கைய வச்சுட்டேன். ஒரு நாள் இரவு முழுக்க ஜெயில இருந்தன். யார அடிச்சு நான் ஜெயிலுக்குப் போனேனோ அவரே தான் என்னோட வாழ்க்கை மாறியதற்கு முக்கியமான காரணம். அவர் தான் என்னை ஜெயில்ல இருந்து வெளியிலேயே கொண்டு வந்தார்.

இப்படி அனுராக் தனது அனுபவத்தை பகிர்ந்த நிலையில், அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் யார் அந்த நபர் என்ற விவரத்தை அனுராக் கூறவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement