மாடல் அழகியாக காணப்பட்ட சனம் ஷெட்டி தமிழில் வெளியான அம்புலி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்பு மலையாளத்திலும் தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.
2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்பு தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனையும் விமர்சித்து வருவதில் பிரபலமானவராக காணப்படுகிறார்.
மேலும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனை காதலித்த இவர், தனக்கு தர்ஷனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் தற்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்து இருந்தார்.
ஆனாலும் இதற்கு பதில் அளித்த தர்ஷன், சனம் ஷெட்டி தன்னை டார்ச்சர் செய்ததாகவும் அவர் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாகவும் பேட்டியில் கூறியிருந்தார். அதன் பின்பு இந்த சம்பவம் அப்படியே மறைந்து விட்டது. மேலும் சனம் ஷெட்டி சமூகத்தில் நடக்கும் வன்முறைகள் தொடர்பாகவும் பெண்கள் சார்பிலும் அடிக்கடி குரல் கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில், இன்றைய தினம் காதலர் தினத்தை கொண்டாடும் விதத்தில் தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன்படி மௌன ராகம் படத்தில் இடம்பெற்ற பட காட்சிகள் மூலம் இருவரும் கியூட்டாக நடித்து தமது காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.
தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் காதலர் இவரா? இல்லை இதுவும் ட்ராமாவா? என பல கேள்விகளை அடக்கி வருகின்றனர். இன்னும் சிலர் சனம் ஷெட்டிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!