• Feb 21 2025

அல்லு அர்ஜுனை திடீரென அன்ஃபாலோ செய்த ராம் சரண்..! டோலிவுட்டில் கிளம்பிய சர்ச்சை

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் 2007 ஆம் ஆண்டு முதல் பான் இந்திய நடிகராகவும் காணப்படுகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான மகதீரா திரைப்படம் அதிகம் வசூல் செய்த படமாக காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து நாயக், ரங்காஸ்தலம், RRR  என தொடர்ச்சியாகவே வெற்றி படங்களை குவித்து வருகின்றார் ராம்சரண். ஆனாலும் இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் டல் அடித்தது.

d_i_a

இந்த நிலையில், ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உறவினரான நடிகர் அல்லு அர்ஜுனை அன்ஃபாலோ செய்துள்ளார். இந்த சம்பவம் டோலிவுட் சினிமாவில் பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும் இதற்கான காரணங்கள் என்னவென்று ரசிகர்களும் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.


அதாவது ராம் சரனும் அல்லு அர்ஜுனும் உறவினர்கள். இவர்களுக்குள் நல்ல நட்பும் காணப்படுகிறது. ஆனாலும் திடீரென ராம் சரண் அல்லு அர்ஜுனன் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

மேலும் இது தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சர்ச்சைக்கு ராம் சரணும் எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை. ஆனால் இது உண்மை இல்லை என்று ஒரு தரப்பு விவாதித்து வருகின்றது. ஆனால் இது தேர்தல்  சமயத்தில் நடந்த குடும்ப சண்டை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement