தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் பாலாஜி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றார். அதாவது , பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியதுடன் அதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்திருந்தார்.
அத்தகைய பாலாஜி தனது திரையுலக பயணத்தை ஜே. எஸ். கே சதீஷ் இயக்கத்தில் உருவான ‘Fire’ திரைப்படத்திலிருந்து தொடங்கியுள்ளார். அந்தப் படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் ரச்சிதாவும் பாலாஜியும் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் பாலாஜி நேர்காணலில் சோகத்துடன் கதைத்த வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாகி உள்ளது.
அவர் அதில் கதைக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் சிந்திய வண்ணம் கதைத்துள்ளார். மேலும் பாலாஜி , " எனக்கு மட்டும் தான் இந்தளவிற்கு நெகட்டிவிட்டி உள்ளது என்றதுடன் திறமை இல்லாமல் பணம் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை திறமை உள்ளவர்களுக்கே இப்படியான பிரச்சனைகள் வரும் " என வேதனையுடன் கூறியுள்ளார்.
Listen News!