தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸுக்கு பின், சமந்தா நடிப்பில் சிட்டாடல் ஹனி பனி எனும் வெப் சீரிஸ் உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்திய சினிமாவில் தற்போது தனி இடத்தை பிடித்துள்ள சமந்தா, பாலிவுட்டில் மிகப்பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதனை மிஸ் செய்துள்ளார்.
அதாவது கடந்த 2023ல் வெளியாகி உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சமந்தா சில காரணங்களுக்காக நடிக்க வில்லை என்று கூறியுள்ளார் அந்த வாய்ப்பை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிடித்துக்கொண்டார்.
நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தில் கிடைத்த வாய்ப்பையே இவர் இவ்வாறு நிராகரித்துள்ளார். அந்த படத்தில் நடித்திருந்தால் அவருக்கென உள்ள மார்க்கெட் இன்னும் உயர்ந்த்திருக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா ஒப்புக்கொள்ளாத நிலையிலே நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
Listen News!