• Feb 12 2026

‘பெத்தி’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

ராம் சரண் – இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

அதன் பின்னர், ராம் சரண் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ‘பெத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘சிகிரி’ வெளியான போது , அதன் லிரிக்ஸ் வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 'பெத்தி' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement