தமிழ் திரையுலகில் இளம் நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அபிஷன் ஜீவிந்த், தற்போது கதாநாயகனாக ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் முன்னதாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
இன்று வெளியாகிய ‘வித் லவ்’ திரைப்படத்தில், அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இந்த புதிய கூட்டணி, வெளிப்படையான ரொமான்ஸ் மற்றும் காமெடியின் கலவையுடன், திரையரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வித் லவ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களம், காமெடி, காதல் மற்றும் குடும்பப் பின்னணிகளை நன்றாக சமநிலைப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த் தனது உணர்ச்சிகளை திரையரங்கில் பகிர்ந்தார். சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அவர் ரசிகர்களிடம் நன்றி தெரிவித்தார்.
அதாவது, “படம் பார்க்க வந்த எல்லாருக்கும் நன்றி. கண்டிப்பாக படம் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு என்று நம்புறேன். எல்லாரையும் தியேட்டருக்கு வந்து பார்க்க சொல்லுங்க. LOVE YOU ALL.” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!