• Mar 20 2026

நளினியின் பேச்சால் கண்ணீர்விட்ட ராஜேந்தர்! உயிருள்ளவரை உஷா ரீ-ரிலீஸ் விழாவில் நடந்தது என்ன

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லெஜென்ட் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர், கோலிவுட்டில் மட்டுமின்றி தமிழக திரையுலகில் சிறப்பாக அறியப்பட்டவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் மக்கள் மனதில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, டி.ராஜேந்தர் இயக்கிய “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி, திரையுலக ரசிகர்களை மீண்டும் திரையரங்கில் கவரும் நிலையில் உள்ளது.

இந்த புதிய ரீ-ரிலீஸை முன்னிட்டு நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் விழா தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. விழாவில் நடிகை நளினி உருக்கமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார், அதனால் அனைவரும் நெகிழ்ச்சியடைந்து கொண்டனர். 


ப்ரீ-ரிலீஸ் விழாவில், நளினி தனது அனுபவங்களை பகிர்ந்த போது, "டி.ராஜேந்தர்தான் என்னை செதுக்கினார். அவர் தான் எனது சாமி, தெய்வம் எல்லாமே. அந்தப் படம் நடித்த சமயம் எனக்கு சின்ன வயது. யார் யாரோ என்னை சத்தம் போடுகிறார்கள் என்று கோபித்துக்கொண்டு சென்றுவிடுவேன். 

அந்த சமயத்தில் யார் யாரோ அவர்களது சகோதரிகளை எல்லாம் நடிக்க வைத்தார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ எனது வீட்டுக்கு வந்து நளினி நடித்தால் தான் இந்தப் படத்தை நான் எடுப்பேன் என்று சொன்னார். யாருமே அப்படி செய்யமாட்டார்கள். அவரால் தான் இன்று நான் உங்கள் முன்பு நிற்கிறேன்." என்றார். 

இதனைக் கேட்ட ராஜேந்தர், "நளினி பேசும் போது என்னால தாங்க முடியல. மேலும் எனக்கு தரையில நடிக்க தெரியாது என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்." இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும், இணையத்தில் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Advertisement

Advertisement