• Mar 08 2026

டிடிஎஃப் வாசனின் ‘ஐபிஎல்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.! எப்போது தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சிகளுடன் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் டிடிஎஃப் வாசன், கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் தான் “ஐபிஎல்”. இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் உருவான இந்த படம், அரசியல் பின்னணியில் அமைந்த ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.


இந்நிலையில், இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் காண முடியாத ரசிகர்களுக்கான ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. “ஐபிஎல்” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி, டிடிஎஃப் வாசனின் “ஐபிஎல்” திரைப்படம் டென்ட்கொட்டா (Tentkotta) ஓடிடி தளத்தில் நாளை (பிப்ரவரி 7) வெளியாக உள்ளது. இதன் மூலம்,ரசிகர்கள் ஓடிடியில் இந்த படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement