• Feb 06 2026

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாஸ்… "சிலம்பாட்டம்" ரீ-ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்.!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

2008ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் (சிம்பு) மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ திரைப்படம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 6) மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு தியேட்டரில் சிம்பு ரசிகர்கள் நடத்திய உற்சாக கொண்டாட்டங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

‘சிலம்பாட்டம்’ திரைப்படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்பே சிம்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியான முதல் நாள் காட்சிகளிலேயே அந்த எதிர்பார்ப்பு உண்மையாக்கப்பட்டுள்ளது. 


சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தியேட்டரில், ரசிகர்கள் பெரிய பேனர்கள், கட்-அவுட்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு படத்தை வரவேற்றுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

‘சிலம்பாட்டம்’ திரைப்படம் 2008ஆம் ஆண்டு வெளியான போது, சிம்புவின் வேறுபட்ட கதாபாத்திரம் மற்றும் ஆக்ஷன் – மாஸ் அம்சங்கள் காரணமாக ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அந்த காலகட்டத்தில் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

படத்தில் சிம்புவுடன், பிரபு, சினேகா, சானா கான், நெடுமுடி வேணு மற்றும் கிஷோர் உள்பட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்திருந்தது.

படத்தில் சினேகா – சிம்பு இடையேயான காதல் காட்சிகள் அந்த காலத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ரீ ரிலீஸ் ஆனதும், அந்த பழைய நினைவுகளை மீண்டும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement