சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரவி, மனோஜ், முத்து ஆகிய மூவரும் மொட்டை மாடியில் சரக்கு அடித்து தங்களின் மனக்கவலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். அந்த நேரத்தில் ரவி, 'என் பொண்டாட்டி வரணும்' என ஏங்கிக் கொண்டிருக்க, மனோஜ் மட்டும் 'என் பொண்டாட்டி வரவே வேண்டாம்' என புலம்புகிறார்.
அடுத்த நாள், ரவி முத்துவுக்காக ஸ்பெஷலாக சாப்பாடு செய்து கொடுத்து, 'உன்னை சந்தேகப்பட்டது எனக்கு கில்டியா இருக்கு' என மனம் திறந்து பேசுகிறார். அதற்கு முத்து, 'என்ன நடந்தாலும் நீ என் தம்பிதான், என் பாசம் எப்போதும் மாறாது' என்று ரவியை சமாதானம் செய்கிறார்.
மற்றொரு பக்கம், மனோஜை மடக்க ரோகினி புதிய திட்டம் போடுகிறார். சிந்தாமணியின் அடியாளிடம் பேசி, தான் பார்க்கில் இன்னொருவருடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் சொல்லுமாறு ஏற்பாடு செய்கிறார். அதன்படி அவரும், மனோஜின் நண்பன் சந்தோஷுக்கு கால் செய்து, 'பாசின் மனைவி இன்னொருவருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். டெய்லி இதான் நடக்கிறது. ஆனா இதை மனோஜிடம் சொல்ல வேண்டாம்' என தெரிவிக்கிறார். ஆனாலும் அதனை மனோஜ் கேட்டு விடுகிறார்.
இதனால், இது உண்மையா பொய்யா? என நேரில் சென்று பார்க்க மனோஜ் முடிவு செய்கிறார்.
இறுதியில், சீதா தன் அம்மா வீட்டுக்கு வருகிறார். அவரை பார்த்த மீனா, சீதாவின் கையில் கட்டும், முகம் முழுவதும் வீக்கமும் இருப்பதை கவனித்து என்ன நடந்தது என கேட்க, சீதா அழுதபடியே நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
Listen News!