• Apr 15 2026

விஜய்க்கு ரூ.1.5 கோடியை அபராதமாக விதித்த உயர் நீதிமன்றம்.! முழுவிபரம் இதோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காக அவர் பெற்றதாக கூறப்படும் ரூபாய் 15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் முறையாக காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், நடிகர் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


‘புலி’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய் ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த தொகையை அவர் தனது வருமான வரி கணக்கில் முழுமையாக காட்டவில்லை என வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. இதையடுத்து, வருமான வரி சட்ட விதிகளின் அடிப்படையில், அந்த தொகையின் 10 சதவீதம், அதாவது ரூபாய் 1.5 கோடி அபராதமாக விதிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த அபராதத்தை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், வருமான வரித்துறை விதித்த அபராதம் சட்டபூர்வமற்றது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் ரூபாய் 1.5 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement