• Apr 15 2026

பாதி படத்துக்கு அப்புறம் நடிக்க தயங்கினார்.. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் பின்னணி

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் காலத்தால் அழியாத திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் “ஆறிலிருந்து அறுபது வரை” படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் உருவான ஒரு முக்கியமான படைப்பாகும். மனித வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை அழகாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பதிவு செய்த இப்படம், இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், இப்படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் படப்பிடிப்பு காலத்தில் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பகிர்ந்த இந்த அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேர்காணலில் எஸ்.பி.முத்துராமன், “ஆறிலிருந்து அறுபது வரை படத்துல தான் எனக்கும் ரஜினிக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அது வெறும் படம் இல்ல. எங்க வாழ்க்கையில நடந்த சம்பவங்களின் தொகுப்பு. பாதி படம் நடிச்சிட்டு 'என்ன சார் தம்பி தங்கைக்கு இவ்ளோ உதவி செய்றேன். இப்படி நன்றி கெட்ட தனமா பண்ணுவாங்களா.?' இதுல ஏதோ லாஜிக் இடிக்குதுன்னு சொன்னார்.

அப்புறம் நானும் பஞ்சு அருணாச்சலமும் 'ஒரு 500 அடி எடுத்துக் காமிக்கிறோம். அத பாரு, உனக்கு பிடிக்கலன்னா கதையை மாத்திடலாம்னு சொன்னோம்.. சொன்ன மாதிரி எடுத்துக் காமிச்சதுக்கு அப்புறம் அவங்கள அப்புடியே கட்டி புடிச்சுக்கிட்டு ,'சார் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ண பார்த்தேன். நீங்க என்ன சரியா வழி நடத்திட்டீங்க.." என்று சொன்னார்.

இந்த படம், ரஜினிகாந்தின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. குறிப்பாக, வயதான தோற்றத்தில் அவர் நடித்த காட்சிகள், அவரது நடிப்பு திறனை வேறு ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement