• May 17 2026

உங்க பெருந்தன்மை வெங்காயத்த இப்படி தான் காட்டுவீங்களா? ரஜினியை விளாசிய இயக்குநர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மா பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி பொதுமக்கள் வரை பத்மாவின் நேர்மையை கொண்டாடி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு பத்மாவை நேரில் அழைத்து, தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார். 

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, ஒரு சாமானிய தொழிலாளியின் நேர்மையை மதித்த மனிதநேய செயல் என பலர் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில், 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, ரஜினிகாந்தின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து வெயிட்டுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், தூய்மை பணியாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக் கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் ரஜினிகாந்த் அவர்களே...? உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தை காட்ட அவர்களை சீருடையோடு தான் அடையாளப்படுத்துவீர்களா? போலி கொடை வள்ளல்களே..! என்று விமர்சித்து இருக்கிறார். 

அதே நேரத்தில், இயக்குநர்கள் சீனு ராமசாமி மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோரும் பத்மாவின் நேர்மையை பாராட்டி கௌரவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement